அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!!

0
68
அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!!
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்காவில் அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரிசியின் விலை உயர்ந்ததால் மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மழை பெய்து வருகின்றது. இதனால் உள்ளூரில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய அரசு பாஸ்மதி அரிசியை தவிற மற்ற அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த அரிசி ஏற்றுமதிக்கான தடையானது தற்பொழுது அமெரிக்காவில் எதிரொலித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அரிசி ஏற்றுமதியில் எஇந்தியாவின் பங்கானது 40 சதவீதமாக இருக்கின்றது. இந்தியாவில் இருந்து அரிசியானது சுமார் 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய அரசாங்கம் அரிசியை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதித்துள்ளதால் உலக அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்து வெளியிட்ட அறிவிப்பை அடுத்து அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சமடைந்த அமெரிக்கா மக்கள் அரிசிகளை வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட்களில் குவிந்து வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அமெரிக்கா நாட்டில் உள்ள இந்திய கடைகளில் அரிசி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் ஒரு நபருக்கு ஒரு பை அரிசி என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 22 டாலராக இருந்த அரிசிப்பையின் விலை தற்பொழுது 47 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் அரசி ஏற்றுமதிக்கான திடீர் தடையால் பாகிஸ்தான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளது.