இந்தியாவின் 21 நாள் ஊரடங்கை பாராட்டி ஐ.நா சபை அறிக்கை – கொரோனோவை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்

0
134

இந்தியாவின் 21 நாள் ஊரடங்கை பாராட்டி ஐ.நா சபை அறிக்கை – கொரோனோவை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்

இந்தியாவில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து இந்திய மக்கள் தொகையில் சுமார்‌ 5 கோடி அதிதியாவசிய பணியாளர்களை தவிர்த்த மற்ற பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் தங்களை தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையை பாராட்டி ஐ.நா சபை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மிகப்பரந்த அளவிலான திடமான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 125 கோடி மக்களுக்கும் மேல் வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இதுவே உலகல அளவில் மிகப்பெரிய ஊரடங்காக பார்க்கப்படுகிறது. இதுவரை 180 நாடுகளில் 4.20 இலட்சம் மக்களுக்கும் மேல் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை 656 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது‌. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் அவர்களை தனிமைப்படுத்துதல் மேலும் அவர்கள் சார்ந்த நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற செயல்கள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்தியா மேற்கொள்ளும் மிகப்பரந்த அளவிலான நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் எனவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

Previous articleஅத்தியாவசிய பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் கிடைக்கும் : வெளியான அதிரடி அறிவிப்பு!
Next articleஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பு இல்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு