கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

0
113
Attention people!! Holidays for banks in next few days!!
Attention people!! Holidays for banks in next few days!!

கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.

இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.

அந்த வகையில் வங்கி சேவை என்பது தினசரி வாழ்க்கை பயன்பாட்டில் இன்றியமையாததாக மாறி விட்டது. அதனால்  வங்கிகள் அனைத்தும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் எல்லாம் வழக்கம் போல் இயங்கும்.

பண பரிவர்த்தனை செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் எந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இந்த ஜூலை மாதம் மட்டும் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட நிலையில் அதில் 13 நாட்கள் விடுமுறை முடிவடைந்து விட்டது.மேலும் ஜூலை மாதத்தில் இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் ஜூலை 28 ம் தேதியில் அஷூரா பண்டிகையை முன்னிட்டு  ஜம்மு மாறும் ஸ்ரீநகர் பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் ஜூலை 29 ம் தேதி மொஹரம் பணிடிகையை முன்னிட்டு தமிழ்நாடு,ஹைதராபாத் ,ஆந்திரபிரதேசம் ,பெங்களூர்,புதுடெல்லி ,மும்பை ,நாக்பூர் ,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.

எனவே ஜூலை மாதத்தில் இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Previous articleபாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Next articleஇனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!!