அரிசி விலை கிடுகிடு உயர்வு!! கடும் அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இப்படி அத்தியாவசிய பொருட்களின் விலை ஒருபுறம் ஏறி கொண்டு போக தற்பொழுது அரிசியின் விலையும் உயந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு காரணம் என்னவென்றால் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற அரிசியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் உள் மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது அரிசியின் விலையும் சரமாரியாக அத்கிகர்த்துள்ளது.அந்த வகையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ. 450 வரை அதிகரித்துள்ளது சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மத்திய அரசு உள்நாட்டில் போதிய அரிசி கையிருப்பு இல்லாததால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாஸ்மதி அரிசியை தடை செய்துள்ளது.
இதனை குறைக்க வேண்டும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என்று மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.