குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!
கொரோனா பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1000 நியாயவிலை கடைகளின் மூலம் உங்கள் வீடு தேடி வரும் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், மக்களின் அன்றாட தேவைக்கான சூழலை அறிந்து ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களான இலவச அரிசி, எண்ணெய், பருப்பு போன்றவை ஏப்ரல் மாதம் தருவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், குடும்ப அட்டைகளுக்கான
ரூ.1,000 நிவாரணத் தொகை உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் என்று கவலை வேண்டாம் என்றும் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது;
கொரோனா வைரஸை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஒன்று கூடி விடுவார்கள். இந்த அசாதாரண சூழலில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். மேலும் கொரோனா பரவாமல் இருக்க அந்தந்த நியாயவிலை கடையின் மூலம் அவரவர் வீட்டுக்கே நிவாரண தொகை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.