கண்ணியம் தவறாத காவல்துறையினர்! பாதுகாப்பின் இலக்கணமாய் விவசாயிக்கு சல்யூட் அடித்த ருசிகர சம்பவம்.!! எங்கே நடந்தது தெரியுமா..??
கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மாட்டு வண்டியில் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வந்த விவசாயிக்கு போலீஸ் ஒருவர் சல்யூட் அடித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கலபுரகி (Kalaburagi) பகுதியில் லகப்பா (Lakappa) என்ற விவசாயி முகத்தில் துணியை கட்டிக்கொண்டி தலையில் தலைகவசத்தை மாட்டிக்கொண்டு இரண்டு மாடுகளை மாட்டுவண்டியில் கட்டிக்கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த சுரேஷ்குமார் என்ற காவல்துறை அதிகாரி மாட்டு வண்டியை நிறுத்தி, ஏன் தலையில் ஹெல்மெட் போட்டு வண்டியை ஓட்டுகிறீர்கள் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த விவசாயி லகப்பா; நாடு முழுக்க கொரோனா வைரஸ் கிருமி பரவி பலர் இறந்து வருகிறார்கள். அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகத்தில் துணியையும் தலையில் ஹெல்மெட்டையும் அணிந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு பூரிப்படைந்த போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், கொரோனா பாதிப்பை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்ட விவசாயிக்கு மரியாதை நிமித்தமாக சல்யூட் அடித்தார்.
காவல்துறை அதிகாரியின் மரியாதையை பார்த்த விவசாயி தானும் அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக போலீசுக்கு சல்யூட் அடித்தார். கர்நாடகாவில் நடந்த இந்ந நெகிழ்ச்சியான விழிப்புணர்வு சம்பவத்தின் புகைப்படமும், வீடியோவும் இணையவாசிகள் மூலமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. விசாயிக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட நகரத்தில் வாழும் பலருக்கு இல்லை என்பதை, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றியதால் வழக்கு வாங்கியதன் மூலம் அறியலாம்.