144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
147

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பாரத பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது, ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அவ்வப்போது கடைகளில் கூட்டம் சேர்வதாக புகார்கள் எழுந்தன. மேலும் இளைஞர்கள் சிலர் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவது அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது.

அவ்வாறு சுற்றி திரிபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியும் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தனை கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பொது இடங்களை சுற்றி திரிவதால் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது;

மாநிலத்தில் 144 தடை உத்தரவை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான வெவ்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 18 நாட்கள் மக்கள் ஊரடங்கை இந்த குழு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் மக்கள் பொது இடங்களில் காரணமின்றி சுற்றி தெரிந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Previous articleஇளைஞருடன் டிக்டாக் செய்து கர்ப்பமான இளம்பெண் தர்ணா! நாடக காதலன் தலைமறைவு! போலீசார் தேடுதல் வேட்டை.!!
Next articleபோலீஸ் மீது எச்சில் துப்பிய காட்டுமிராண்டி பெண் : வீடியோவை பார்த்து கொந்தளித்த பாலிவுட் நடிகர்!