திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!! வரலாறு காணாத அளவில் சாலையில் மெகா மாற்றம்!!
பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.
மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.
இந்த வகையில் திருப்பதி மலையழகை காணவே ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதிகளில் பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
எனவே திருமலையை காண வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் வரலாறு காணதா அளவிற்கு நவீன சாலையை அமைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக பல அதிகாரிகள் இணைத்து உத்தேச சாலையின் கீழ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்த ஆய்வின் மூலம் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஆர்டிசி பேருந்து நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதை நீட்டிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இது மட்டுமலாமல் நகரில் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் விரிவு படுத்தபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 2900 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ள நிலையில் தற்பொழுது இந்த புதிய சாலையின் மூலம் பக்தர்கள் திருப்பதி கோவிலை விரையில் சென்றடைய முடியும் என்று கூறப்படுகின்றது.