நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மக்கள் செல்வன்?? இணையத்தில் வைரலாகும் ட்வீட்!!
முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து அனைவராலும் “மக்கள் செல்வன்” என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி ஆவார்.
இவரின் எதார்த்தமான நடிப்பு கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. சிறு வயது குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் இவரது படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல், இப்போது தென் இந்திய சினிமாவிலும் தனது நடிப்பால் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் தற்போது பிசியாக நடித்து கொண்டிருக்கும் இவர்,
தற்போது ஹிந்தியில் மேரி கிறிஸ்மஸ் என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக காத்ரினா கைஃப் நடிக்கிறார். இந்த நிலையில், பிரபல திரை விமர்சகராக வலம் வரும் உமைர் சந்து என்பவர் விஜய் சேதுபதியை பற்றி தவறாக பேசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது, இவருடன் நடித்துக் கொண்டிருக்கும் காத்ரினா கைஃப் ற்கு இவர் படப்பிடிப்பு சமயத்தில் பாலியல் தொல்லை குடுத்ததாக ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
நடிகைகளை பற்றி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ள இவர், இதற்கு முன்பு தான் நடிகை பூஜா ஹெக்டே மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருந்தார்.
இதனை எதிர்த்து நடிகை பூஜா ஹெக்டே இவர்மீது வழக்கு தொடர்த்துள்ளார். இப்போது விஜய் சேதுபதி மீதும் அவதூறு செய்தியை பரப்பி வருகிறார். இதற்கு கண்டிப்பாக விஜய் சேதுபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.