ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு!!

0
128

 

ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு…

 

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை இரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு இரயில்வே தகவல் வெளியுட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்த சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற மலை இரயில் சேவை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த மலை இரயிலில் பயணம் செய்வதற்காகவும், சுற்றுலா தளத்தை சுற்றி பார்க்கவும் வெளியூர், வெளி மாநிலங்கள் ஏன் வெளிநாடுகளில் இருந்து கூட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 

இந்த உலகப் புகழ் பெற்ற மலை இரயிலில் பயணம் செய்வதற்காக மட்டுமே அதிகளவு மக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். தினமும் இந்த மலை ரயில் சேவை இயக்கப்படுவது எல்லாரும் அறிந்த ஒன்று தான். தற்பொழுது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை இரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இந்த சிறப்பு மலை இரயில் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி வரை சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கபடவுள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த சிறப்பு மலை இரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அதன்படி சனிக்கிழமை காலை 11.25 மணிக்கு உதகையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு மலை இரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வந்து சேரும். மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மலை இரயில் மதியம் 2.25 மணிக்கு உதகையை வந்து சேரும் என்று தகவல் கிடைத்துள்ளது. சூ

சுற்றுலா சீசனையொட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தெற்கு இரயில்வே இந்த சிறப்பு மலை இரயில் சேவையை தொடங்கியுள்ளது.

 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இந்த மலை ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை இரயில் 12.30 மணிக்கு சென்றடையும்.

 

Previous article“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன??
Next articleநெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது