கவலைகளை மறக்க வாடகைக்கு மனைவி காதலி வேண்டுமா?? இதோ ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்ளலாம்!! 

0
109

கவலைகளை மறக்க வாடகைக்கு மனைவி காதலி வேண்டுமா?? இதோ ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்ளலாம்!! 

தற்போது நமக்கு தேவைப்பட்டால் வாடகைக்கு மனைவி மற்றும் காதலியை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

நம்மால் பெற்றோரை தவிர மீதம் உள்ள எல்லாவற்றையும் வாங்க முடியும். அந்த அளவிற்கு தற்போது டெக்னாலஜி வளர்ந்துள்ளது. ஆனால் தற்போது பெற்றோரை கூட நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். அதுவும் நம்ம நாட்டில் இல்லை ஜப்பானில். இங்கு உள்ளாடைகளில் இருந்து அனைத்தையும் பணம் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். அங்கு வாங்க முடியாதது என்று எதுவும் இல்லை.

குழந்தை இல்லாத தம்பதியினரா நீங்கள்? உடனடியாக ஏஜென்சிக்கு நீங்கள் ஒரு கால் செய்தால் போதும். உங்கள் வீடு தேடி குழந்தைகள் வருவார்கள். அவர்களுடன் நீங்கள் சில விதிமுறைகளின் படி சந்தோசமாக பொழுதை போக்கலாம்.

அதேபோல் பெற்றோர் இல்லையா?? கவலையே படாதீர்கள்!போன் செய்தாலே போதும். உங்களுக்கு தினசரி, மாத வாடகையில் அன்பையும் பாசத்தையும், பொழிவதற்கு பெற்றோர்கள் எப்போதும் தயாராக உள்ளனர்.

குழந்தைகளுக்கு வீட்டு பாடம் செய்யவும் வாடகைக்கு ஆள் கிடைப்பார்கள். ஜப்பானில் உள்ள மக்கள் அனைவரும் வேலையில் உள்ளனர். யாருக்கும், எதற்கும் நேரமில்லை. மேலும்  யாருடைய திருமணத்திற்கும் உறவினர்களோ நண்பர்களோ செல்வதில்லை. திருமணம் நடத்தும் பொழுது ஆட்கள் வேண்டுமா?? இதையும் வாடகைக்கு கொடுக்க ஏராளமான ஏஜென்சிகள் தயாராக உள்ளன. போன் செய்தாலே போதும் 24×7 இப்போது நமக்கு எல்லாமே பணம் இருந்தால் போதும் கிடைக்கும்.

இதையெல்லாம் விட ஹைலைட்டாக தற்போது ட்ரெண்டிங்காகி வருவது வாடகைக்கு மனைவி மற்றும் காதலியை ஆர்டர் செய்வது தான்.

வீட்டை சுத்தம் செய்தல், உட்புற அலங்காரம், தோட்டம் அமைத்தல், சமையல் செய்தல், படுக்கையில் உல்லாசமாக என நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப மனைவி வாடகைக்கு கிடைப்பார்கள். இந்த தற்காலிக மனைவிகளிடம் நீங்கள் வேண்டிய ஆலோசனைகளைப் பெற்று உங்கள் கவலைகளை மறக்கலாம். இதில் திருமண வாழ்க்கையில் வெறுப்புற்று இருக்கும் ஜப்பானிய இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நிபுணர்கள் இதை நிராகரிக்கவில்லை.

ஆன்லைனில் வாடகைக்கு எடுக்கும் மனைவிகள் ஏஜென்சியின் கண்காணிப்பில் எப்போதும் இருப்பர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. மேலும் இதில் அதிக அனுபவங்களை பெற்ற இளம் பெண்களை திருமணம் செய்யவும் பலர் விருப்பப்படலாம்.

ஜப்பானில் குடும்ப உறவுகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் அங்கு யாருக்கும் நேரம் இல்லாததால் இளைய தலைமுறையினரை குறி வைத்து இந்த வாடகை தொழில் படுச்சஜோராக நடக்கிறது. அதைப்போல் ஜப்பான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை காதலிகள் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு காதலியை 6000 யென்களுக்கு 2 மணி நேரம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதில் முதலில் வருபவர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலியை தேர்ந்தெடுக்கலாம். இந்த சலுகையை வாடகை காதலியை தேடும் ஆண்கள், இதுவரை காதலி இல்லாதவர்கள் அல்லது இதுவரை ஒரு பெண்ணுடன் வெளியில் செல்லாதவர்கள் அல்லது உண்மையான துணையை பெறுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள் பயன்டுத்தி கொள்ளலாம்.

இதில் முக்கியமாக வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட காதலிகளை நேரடியாக தொடர்புகொள்ள இயலாது. மேலும் வாடகை காதலிகளுக்கு பரிசு பொருட்கள், உதவி குறிப்புகள் ஏற்றுக் கொள்வதை தடை செய்யப்பட்டுள்ளது.

 

Previous article“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
Next articleமாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!