வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..! 7 செயற்கை கோள்களுடன் பயணம்..!

0
109

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..! 7 செயற்கை கோள்களுடன் பயணம்..!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி . சி-56 ராக்கெட் வெற்றிகரமாக 7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா, பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO,ஜூலை-30 ஆன இன்று பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணியை தொடங்கியது.

இதன்படி ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது.கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி காலை 6.30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த TeLEOS-2 செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. சி.55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் மற்றொரு செயற்கைக்கோளான DS-SAR என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ‘டிஎஸ்-சார்’ செயற்கை கோளின் எடை 360 கிலோவாகும் .

மேலும் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்ட இந்த செயற்கை கோள் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐ.ஏ.ஐ) இன் செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.
மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் டிஎஸ்-சார்’ செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளதென்று தெரிவித்தனர்.

மேலும் பி.எஸ்.எல்.வி .சி-56 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்வதை பார்ப்பதற்காக மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களிலேயே மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை வெற்றிகரமாக செலுத்தியிருப்பது, இஸ்ரோ வின் ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகாலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு!!
Next articleகிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்!!