காலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு!!

0
30

காலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு!

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாவதால் சாமானியர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது.இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை மளமளவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கிலோ ரூ .140 க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ.10 உயர்ந்து,கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்பட்டது,மேலும் முதல் ரகம் தக்காளி கிலோ ரூ. 150-க்கும், இரண்டாம் ரகம் ரூ.140-க்கும்,மூன்றாம் ரகம் ரூ.130-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்து ஒரு கிலோ ரூ.160 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது.

இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதன் விலை ரூ.60 வரை உயர்ந்துள்ளது என்பதுதான்.மேலும் தேவைக்கேற்ப வரத்து இல்லாத காரணத்தினால் தான் தொடர்ந்து இவ்வாறு உயர்வதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.