ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில்,
தற்போது இதற்கான மூன்றாம் கட்ட ஆலோசனைக் கூட்டமானது நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிகல்வி இயக்குனர் க.அறிவொளி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பள்ளிகல்வி இயக்குனர் தலைமையிலான பேச்சு வார்த்தை ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு வேண்டுகோள் விடுத்ததனால் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருகின்றனர். எனவே, இவர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் தாரளமாக கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களின் சார்பாகவும் ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு ஆசரியர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் பற்றி கலந்தாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை நடக்க இருக்கும் இந்த பேச்சு வார்த்தையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.