கொரோனோவால் சரிந்த பொருளாதாரம் – மன உளைச்சலில் நிதியமைச்சர் தற்கொலை

0
126

கொரோனோவால் சரிந்த பொருளாதாரம் – மன உளைச்சலில் நிதியமைச்சர் தற்கொலை

உலகம் முழுவதும் நாள்தோறும் ஏற்படும் உயிர் இழப்புகள் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதில் குறிப்பாக ஜெர்மனியில் 50000 க்கும் அதிகமான மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மரியின் ஹீசி மாகாணத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் தாமஸ்ஸீபர் அவரது உடல் சமீபத்தில் அந்த மாகணத்தில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளது.

ஹீசி மாகாணத்தின் தலைவர் வோல்கர் சோபியர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தாமஸ்ஸீபர் அவர்கள் கொரோனோவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை எப்படி சரி செய்யப்போகிறோம் என்று மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அவரது ஆளுமைத்திறன் எங்களுக்கு மிகுந்த தேவை ஆனால் அவரது இந்த இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. ஜெர்மனியின் மிக முக்கியமான பொருளாதார தலைநகராக விளங்கும் நகரங்கள் இந்த மாகணத்தில் தான் உள்ளது.

இதுவரை ஜெர்மனியில் ஐம்பதாயிரத்திற்கு மேல் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில் நானூற்று ஐம்பது நபர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனா நோயாளிகள் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும்
Next articleஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. -மத்திய அரசு