ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. -மத்திய அரசு

0
85

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது. -மத்திய அரசு

ஊரடங்கின் போது பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் வீட்டு உரிமையாளர்கள் இந்த இக்கட்டான சூழலில் வாடகையை வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் மக்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவுறுத்தி வருகிறது.

வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் மீது வழக்கு அல்லது நூதன தண்டணையை போலீசார் வழங்கி வருகின்றனர். சில இடங்களில் லட்டியால் அடித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பலர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களிடத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் வாடகைக்கு குடியிருக்கும் வாடகை கேட்டு தொல்லை தர வேண்டாம். வாடகை தரமுடியாமல் தவிப்பவர்களுக்கு டெல்லி அரசே மூன்று வாடகையை தரும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் பலர் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.

author avatar
Jayachandiran