தளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!!
தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் திர்ஷா ,யோகி பாபு ,அர்ஜுன் ,பாலிவுட் ஆக்டர் சஞ்சய் தத் அவர்கள் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பு 6 மாதத்தில் 125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் தளபதியின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இருபது வருடங்களுக்கு பிறகு தளபதியின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமையக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது வெங்கட் பிரபு தளபதி 68 குறித்து சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படம் பற்றி எதாவது அப்டேட் கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு வெங்கட் பிரபு அப்டேட் வரும்பொழுது சும்மா தெறிக்கும் என்று பதில் கொடுத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.