மஞ்சள் கறை படிந்த பற்களுக்கு குட்பை சொல்லிடுங்க!! இனி நன்றாக புன்னகை செய்யுங்கள்!!

0
110

மஞ்சள் கறை படிந்த பற்களுக்கு குட்பை சொல்லிடுங்க!! இனி நன்றாக புன்னகை செய்யுங்கள்!!

நூறில் 30 சதவீதம் நபர்கள் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் பற்கள் மஞ்சள் படிந்து காணப்படுவது ஆகும். சில பேருக்கு மஞ்சளாகவும் சில பேருக்கு பச்சையாகவும் ஒரு சிலருக்கு கரைகள் படிந்து அழுக்காகவும் காணப்படுகிறது.

இதற்கு காரணம் புகையிலை மது அருந்துவது சிகரெட் போன்ற பழக்கங்களால் அதிகமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பழக்கங்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கு கூட இந்த பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதற்கென்று டூத் பேஸ்ட் இருக்கின்றது ஆனால் அதிலும் இந்த பிரச்சனை சரியாகவில்லை என்று கூறுபவர்களுக்கு இயற்கையான முறையில் இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

அதாவது நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் வாயில் தண்ணீர் ஊற்றி நன்கு கொப்பளித்து கீழே துப்பி விட வேண்டும் ஆனால் அவ்வாறு ஏராளமான செய்வதில்லை இதனாலேயே பற்களில் மஞ்சள் கரை படிந்து காணப்படுகிறது.

சில பேருக்கு இரவு தூங்குவதற்கு முன்பாகவும் பல் துலக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் சில பேருக்கு இந்த பழக்கம் சுத்தமாக கிடையாது. நாம் காலையில் கண்விழித்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஏராளமான உணவுகளை உட்கொள்கின்றோம். எனவே இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு முறை பல் துலக்கி விட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை ஏற்படாது. இப்போது இதை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான வழிமுறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உப்பு
மஞ்சள் தூள்
தேங்காய் எண்ணெய்

வாயில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தொற்றுகளையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பொருள்தான் உப்பு. அந்த காலத்தில் இருந்து இன்று வரை வாயில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக உப்பை போட்டு கொப்பளிக்கவும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

அது பொய்யல்ல வாயில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதில் முதன்மை பங்கு வகிப்பது உப்பு தான். மஞ்சள் தூளில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி ஆன்டி பாக்டீரியல் குணங்கள் அதிகமாக இருக்கிறது.

வாயில் ஏற்படக்கூடிய அல்சரை சரி செய்யக்கூடிய சக்தி இந்த மஞ்சள் தூளுக்கு மிகுந்து காணப்படுகிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி பங்கள் குணங்கள் நம் வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றத்தையும் சரி செய்கிறது.

செய்முறை:
ஒரு கப்பில் அரை ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும்.

இவ்வாறு செய்த இந்த பேஸ்ட்டை இரவு தூங்குவதற்கு முன்பாக பல் துலக்கக்கூடிய பிரஷில் இந்த பேஸ்ட்டை வைத்து நன்கு பல் மூளை முடுக்குகளில் தேய்த்து விடவும். இரண்டு நிமிடங்களுக்கு இந்த பேஸ்ட்டை பற்களில் நன்கு தேய்த்த பின்னர் சாதாரண நேரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ வாய் கொப்பளித்து விட்டு தூங்கவும்.

பிறகு மறுநாள் காலையில் எப்பவும் போல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தி பல் துலக்கி கொள்ளலாம். இவ்வாறு சில நாட்களுக்கு செய்து வர பல்வலி பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்களில் மஞ்சள் வடிந்த கரை ஈறுகளில் ரத்தம் கசிதல் பல் சொத்தை என ஏராளமான பிரச்சனைகள் குணமாகும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

 

Previous articleஉலகின் மிக வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் கோம்ஸ்… தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார்!!
Next article12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!!