இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!
அமெரிக்காவில் வாழ்வில் ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய நெகிழிகளுக்கு கடும் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.அது என்னவென்றால் அமெரிக்க மக்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் நெகிழிகளின் அளவு மொத்தம் 32 கோடி டன் என்றும் அதில் 95% குப்பை ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழ்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழிகளை குறைக்கும் விதமாக உணவகங்கள் மற்றும் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் கேட்காமல் தாங்களாக நெகிழி பொருட்களை அதாவது கரண்டி,கத்தி,தட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்குதல் கூடாது என்று
நியூயார்க் நகர மேயர் ‘எரிக் ஆடம்ஸ்’ கடும் கட்டுப்பாடு விதித்துள்ளார்.மேலும் இக்கட்டுப்பாடுகளை மீறினால் இந்திய மதிப்பின் படி ரூ.20 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படுமென்று தெரிவித்துள்ளார்.நியூயார்க் சிட்டி எடுத்துள்ள இம்முடிவால் அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாடு சற்று குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெகிழிகளால் ஆபத்து
பொதுவாக நெகிழிகள் நீர்,நிலம்,காற்று ஆகிய மூன்று வழியாக மொத்த உலகத்தையும் பாதிக்க வல்லது.அவை எளிதில் மட்கும் தன்மையற்றவை என்பதால் சுற்றுசூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்டது.இதில் அதிர்ச்சி என்னவென்றால் உலகில் பயன்படுத்தப்படும் நெகிழிகளில் வெறும் 7% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.இந்நிலையில் மீதமுள்ள நெகிழிகளால் இவ்வுலகிற்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதன் புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மட்டுமே இனிவரும் நாட்களில் நெகிழி பயன்பாட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
ஏற்கனவே நம் தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தபடும் நெகிழிகளுக்கு தடை விதிக்கப்பட்டு 1.1.2019 அன்று தடை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.