ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!!
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்களுக்கு தங்களது டிக்கெட் பணம் வீணாகின்றது.
இந்த நிலையில் ரயில்வே நிர்வாகமானது நாம் பதிவு செய்யும் டிக்கெட்களை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியும் என்ற புதிய அமைப்பை கொண்டுவந்துள்ளது.
நீங்கள் பதுவு செய்யும் டிக்கெட்டில் உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால் உங்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இந்த டிக்கெட்டை மாற்றி கொடுக்கலாம்.
இவ்வாறு நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும்.அதன் பின்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த டிக்கெட்டை உங்களது அருகில் உள்ள ரயில்வே துறைக்கு எடுத்து சென்று யாருடைய பெயரில் மாற்ற விரும்புகிறீர்களோ அவர்களது ஆதார் அட்டை கொடுத்து அந்த நபரின் பெயரை குறிபிட்ட வேண்டும்.
அதன்பின்பு டிக்கெட் பரிமாற்ற விண்ணப்பத்தை மாற்றிவிட வேண்டும். ரயில் புறப்படுவதற்கு முன்பாக இந்த படிவத்தை மாற்றி இருக்க வேண்டும்.
அதுவே நீங்கள் பணிகை சமயங்களில் இதனை மற்ற விரும்பினால் குறைந்த பட்சம் 48 மணி நேரத்திற்கு முன்பு இதனை செய்து முடித்திருக்க வேண்டும். இதில் சில கட்டுபாடுகளையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது அந்த வகையில் இதனை நீங்கள் ஒருமுறை மட்டுமே பெயர் மற்றம் செய்ய முடியும். எனவே பயணிகள் தாங்கள் யார் பெயருக்கு மாற்ற உள்ளோம் என்பதில் கவனம் வேண்டும்.