லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை… பொதுமக்கள் அதிர்ச்சி!!
தினசரி வாழ்வில் நம்மால் உணவு,தண்ணீர் போன்றவற்றை எப்படி தவிர்க்க முடியாதோ அதேபோல் சமூக வலைத்தளங்களும் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
நண்பர்கள்,உறவுகள் நம்மை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்களை இணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன.மேலும் நம் கருத்துகளை பகிர,தகவல்களை பெற பயன்படும் இவை நமக்கு சாதகமாக மாறுவதும் பாதகமாக மாறுவதும் நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது.
தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக இஸ்டாகிராம்,யூடியூப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களை நாடுகின்றனர்.இதனால் அதன் மீது மோகம் ஏற்பட்டு நாளடைவில் அடிமையாகி விடுகின்றனர். தற்பொழுது எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் மையமாகவே இருக்கின்றது.மேலும் இவர்கள் ரீல்ஸ் செய்கின்றோம் என்ற பெயரில் பொது இடங்களில் இவர்கள் செய்கின்ற செயல்கள் பொதுமக்களுக்கு இடையூறாகவும்,முகம் சுளிக்கும் வகையிலும் அமைகின்றது.
இப்படி இஸ்டாகிராம் லைக்ஸ்காக நாகர் கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஒரு இளம்
ஜோடி செய்த செயல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நேற்று முன் தினம் அண்ணா நகர் பேருந்து நிலையத்திற்கு ஒரு பெண்ணும் வாலிபரும் வந்துள்ளனர்.இந்நிலையில் அங்கு பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,பெரியவர்கள்,
குழந்தைகள் என்று அனைவரும் இருந்த நிலையில் அவ்வாலிபர் அவருடன் வந்த பெண்ணை திடீரென்று தூக்கினார்,அதனை ஒருவர் போனில் வீடியோ எடுத்த நிலையில் சிறிது தூரம் அவ்வாலிபர் சென்றார்.இதனை பார்த்த பொதுமக்கள் முதலில் சூட்டிங் நடக்கின்றது என்று எண்ணினர்.இந்நிலையில் விசாரித்த பிறகு அவ்வாலிபரும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் இஸ்டாகிராம் ரீல்ஸ்காக இவ்வாறு செய்துள்ளனர் என்ற உண்மை தெரியவந்தது.
இதனையடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டித்து,தடுக்க வேண்டுமென்று காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது போல் சமூக வலைத்தளங்களை அளவோடு பயன்படுத்தினால் நமக்கு எவ்வித கெடுதலும் நேராது என்பது குறிப்பிடத்தக்கது.