விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்!

Photo of author

By Jayachandiran

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதித்து வீட்டிலேயே முடங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிற ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. மேலும் சினிமா திரைப்பட நடிகர்களும் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளிக்க ஆரம்பித்தனர். இன்னமும் மக்கள் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் கொரோனா பாதிப்பால் உணவின்று தவிக்கும் ஏழைகளின் பசியை போக்க களத்தில் இறங்கியுள்ளனர். விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பசியால் வாடும் கூலித் தொழில் செய்யும் மக்களுக்காக 150 மூட்டை அரிசியை வழங்கியுள்ளனர். கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், பலர் இந்த உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி காவல்துறையில் தண்டனைக்கு ஆளாகி வருகின்றனர். வெளி மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்கள் 100 கி.மீ நடந்தே சொந்த ஊருக்கு வந்த சம்பவங்களும் தினமும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் அரசுக்கு அனைவரும் ஆதரவளித்து நடக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணத்தால் பலதரப்பு தொண்டு மற்றும் சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளை ஏழைகளுக்கு வழங்கியது பலரிடம் பாராட்டை பெற்று வருகிறது.