நாளை இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!
நாட்டில் பல்வேறு போக்குவரத்து வழிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதிகின்றனர்.
எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான புதிய புதிய சலுகைகளை தினமும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வார இறுதியில் வரக்கூடிய விடுமுறை நாட்களை முன்னிட்டு தாம்பரம் மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை மதியம் சரியாக 3.30 மணி அளவில் இந்த சிறப்பு ரயிலானது கன்னியாகுமாரி நோக்கி புறப்பட இருக்கிறது. அதேப்போல, கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் இந்த சிறப்பு ரயில் புறப்பட இருக்கிறது.
வார விடுமுறை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், இது முழுக்க முழுக்க பயணிகளின் நலனுக்காகவே மட்டுமே என்றும் கூறி உள்ளது.
அதேப்போல கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளுக்கு இடையில் வாரம்தோறும் இயக்கப்பட்டு வருகின்ற சிறப்பு ரயிலானது ஆகஸ்ட் மாதம் 23 முதல் இரணியலில் நின்று விட்டு செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது இனிமேல் ஆகஸ்ட் 23 முதல் இரணியலில் சரியாக ஒரு நிமிடத்திற்கு நின்று விட்டு பிறகு செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.