தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

0
138

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

 

பொதுவாக அரபு நாடுகளின் சட்டம் என்றால் கடுமையானதாகவும், குற்றம் இழைத்தவர்கள் தப்ப வழியேதும் இல்லாத சட்டமாக தான் இருக்கும்.இந்நிலையில் கடுமையான சட்டத்தை கடைபிடிக்கும் அரபு நாடான சவுதி மற்றும் குவைத் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

 

இந்த நவீன காலத்தில் அனைவரும் தங்களின் தகவல்களை சமூக வலைத்தளங்களான பேஸ் புக்,வாட்சப்,இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் தான் பகிர்ந்து வருகின்றோம்.இந்நிலையில்

டைப்பிங் செய்வதை காட்டிலும் ஈமோஜி அனுப்புவதால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.மேலும் பல ஈமோஜி இருக்கும் நிலையில் நமது அன்பை வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் ஈமோஜி ‘சிவப்பு ஹார்ட் ஈமோஜி’.இப்படியிருக்கையில் இந்த ‘சிவப்பு ஹார்ட் ஈமோஜி’ அனுப்பினால் சிறைத்தண்டனை உறுதி என்று சொன்னால் யாராக இருந்தாலும் சற்று பீதி ஆக தான் செய்வார்கள்.அப்படியொரு சட்டத்தைத்தான் அரபு நாடுகள் தற்பொழுது கொண்டு வந்துள்ளது.

 

குவைத் நாட்டு சட்டப்படி,சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர நாம் பயன்படுத்தும் செயலிகளில் தமக்கு அறிமுகமில்லாத பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு நபர் ‘சிவப்பு ஹார்ட் ஈமோஜி’ அனுப்பினால் அது குற்ற செயல்களில் ஒன்றாக கருதப்படும்.மேலும் இக்குற்றத்திற்காக

2 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன்,2000 குவைத் ‘தினார்’ அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மேலும் 2000 குவைத் தினார் என்றால் இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.5,37,800 ஆகும்.

 

 

மேலும் சவுதி நாடும் ‘சிவப்பு ஹார்ட் ஈமோஜியை சமூக வலைதள செயலிகளில் அனுப்புவதை குற்ற செயலாக பார்க்கின்றது.இந்நிலையில் சவுதி நாட்டு சட்டப்படி இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டு,1 லட்சம் சவுதி ரியால் அபராதமாக விதிக்கப்படும்.மேலும் 1 லட்சம் ரியால் என்றால் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.22,00,000 ஆகும்.இந்நிலையில் ஒரு நபர் திரும்ப திரும்ப இந்த குற்ற செயலில் சிக்கினால் அவருக்கு 3 லட்சம் சவுதி ரியால் அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.63,92000 வரை அபராதமாக விதிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுமென்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Previous articleமகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!
Next articleதக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!!