மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

0
51

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

திமுக வானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவோம் என கூறியது. ஆனால் அந்த அறிக்கையில் ஆயிரம் வழங்குவதற்கு எந்த ஒரு கோட்பாடுகளையும் கூறவில்லை.

பொதுவாகவே அனைவருக்கும் வழங்குவோம் என்று தான் கூறியிருந்தனர். ஆட்சியைப் பிடித்து இரண்டு வருடங்கள் மேலாகியும் இதைப்பற்றி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

அதன் பிறகு அண்ணா பிறந்தநாள் அன்று ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக வெளியிட்டது. அவ்வாறு கூறியிருந்தும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் இந்த பணம் கிடைக்கும் என கூறிவிட்டனர்.

அதாவது பல விதிமுறைகளை அமல்படுத்தி அதற்கு உட்பட்டு இருப்பவர்களுக்கு தான் இந்த பணம் என கூறியுள்ளனர். அந்த வகையில் 300 யூனிட் கீழ் மின்சாரம் உபயோகித்திருக்க வேண்டும், சொந்த வீடு இருக்கக் கூடாது, வாகனங்கள் இருக்கக் கூடாது போன்ற பல நிபந்தனைகளை போட்டுள்ளனர்.

இதை கண்ட பெண்கள் அதிருப்தி அடைந்த நிலையிலேயே உள்ளனர். மேலும் இதனை எதிர்த்து பலர் கேள்வி கேட்டும் வருகின்றனர். தற்பொழுது இதன் முதற்கட்ட பணியான விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை 79 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேற்கொண்டு இதற்கு சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வரையில் நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்காமல் விட்டவர்கள் அடுத்து நடைபெறும் முகாம்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த முகாமானது இம்மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆயிரம் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளதால் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் ஆயிரம் வழங்குவதற்கான நிபந்தனைகள் தகர்க்கப்படுமா என்று பெருமளவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி பலரும் விண்ணப்பிக்க வேண்டி உள்ளதால் மேற்கொண்டு முகாம்கள் நடத்தும் தேதி விரிவாக்கம் செய்யப்படுமா என்றும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.