இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் மலிவான பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு மலிவான விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றத. மேலும் விலையில்லாத அரிசி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனை பல ரேஷன் அட்டை தாரர்கள் வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பல்வேறு விதமான குளறுபடிகள் நடந்து வருவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டே உள்ளது.மேலும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாகவும் , தரமாக இல்லை என்றும் புகார் வருகின்றது. இதிலும் சில பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் கள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இதுபோன்ற தவறுகளை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்தவகையில் ரேஷன் கார்டுகளுடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று வலியூர்தப்படுள்ளது. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் 9500 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு பயனாளர்கள் அனைவரும் நுகர்வோர் பட்டியலில் தங்களது பெயரை இணைத்து பொருட்களை வாங்கி வந்த நிலையில் தற்பொழுது 9500 பயனாளர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.