அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

0
112

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!!

 

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து, விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.அப்போது,திடீரென செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதால்,அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் இதய அறுவை சிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் இருந்து,புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  சிறையில் ‘ஏ’ வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் இல்லம்,செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு,அவரது கிரானைட் நிறுவனம்,செங்குந்தபுரத்தில் மற்றொரு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் கோவை ராமநாதபுரம் மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் முத்துபாலனின் வீடு மற்றும் திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் அவர்களின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.

இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதனின் வீடு, அலுவலகம்,அவரது பண்ணை இல்லத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

 

இவ்வாறு தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறையின் இந்த அதிரடி, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!!
Next articleமின் மீட்டர் வாடகை வணிக நிர்வாகிகள் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி பயணம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!