இனி அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர் மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய அரசுகளும் பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு பொது மக்களின் நலனை கருத்தி கொண்டு ஒரு புதிய திட்டத்தை அறிமுகபடுத்தி உள்ளது. இந்த திட்டம் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூடத்தில் பொது மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் மகராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், மகளிர் மருத்துவம், கிராமப்புற மருத்துவமனைகள், மாவட்ட பொது மருத்துவனைகள் மற்றும் பல்நோக்கு மருத்துவமைகளில் இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 2418 மருத்துவமனைகளில் பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.