மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

0
116
Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!
Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு வந்து இணைந்துள்ளேன். நான் இவ்வளவு நாட்களாக கட்சியில் இருந்து விலகி இருந்ததில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.

நான் இரண்டு ஆண்டுகளாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டு இருந்த போதிலும், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தான் வந்தேன்.

எண்ணெய் யாரும் எதுவும் கேட்கவில்லை. நான் கட்சியில் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன். பாஜக வுடன் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே கூட்டணி வைத்துள்ளது.

இனிமேல் அதிமுக கட்சிக்காக அயராது பணியாற்றுவேன். எனக்கு கட்சியில் எந்த ஒரு அந்தஸ்தும் தேவையில்லை. மக்களவைத் தேர்தலில் போட்டி போடுவது தொடர்பாக அதிமுக கட்சியே முடிவுகளை மேற்கொள்ளும் என்று அன்வர் ராஜா கூறி உள்ளார்.

இரண்டு வருடங்களாக நீக்கப்பட்டு இருந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா திடீரென மீண்டும் கட்சியில் இணைந்திருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து செயலாற்றி வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk