பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

Photo of author

By Sakthi

பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

Sakthi

 

பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

 

இன்று(ஆகஸ்ட்4) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு தங்கலான் படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

பொன்னியின் செல்வன் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்டகத்தி, கபாளி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற.படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

தங்கலான் திரைப்படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி திரிவோடு, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுயோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்துள்ளார். தங்கலான் திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தை பற்றிய கதை என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துச் செய்தி கூறிவிட்டு நடிகை மாளவிகா மோகனன் அவர்களுடைய பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது.

 

தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் “ஒரு சக்திவாய்ந்த மற்றும் நவீன சக்தி தன்னை மறுவரையறை செய்துகொள்கிறது. வருடம் முழுவதும் கடுமையாக உழைத்த நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று கூறி நடிகை மாளவிகா மோகனன் அவர்களுடைய பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

தங்கலான்.திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் பழங்குடியின பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் இதுவரை நடிகை மாளவிகா மோகனன் அவர்களை பார்க்காத தோற்றத்தில் இருக்கிறார்.