அப்டேட்களை கைவசம் வைத்திருக்கும் வாட்ஸ் அப்!! இனி பயனாளர்களுக்கு ஒரே குஷிதான்!!
பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியானது மியூட் செய்வது , மற்றும் நண்பர்களுக்கு சொந்த குரலில் வீடியோ பதிவு செய்து அனுப்பும் வசதி உள்ளிட்டவைகளை வழங்கி வந்தது.
இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.இந்த வகையில் இனி வாட்ஸ் அப் பயனாளர்கள் கூடுதல் சேவைகளை வழங்கி வருகின்றது.
அதன்படி பயனாளர்கள் அனிமேஷன் எமோஜிகளை உருவாக்கும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இது தற்பொழுது வாட்ஸ் அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்படுள்ளது.
மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் இது போன்று கூடுதல் அப்டேட்களை கைவசம் வைத்திருபதாகவும் கூடிய விரைவில் இவை அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.