மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!
மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பத்திற்கு பெண்களும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது மணிப்பூரில் பயங்கர கலவரம் நடைபெறுகின்றது.இதனை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தற்பொழுது நேற்று நடந்த கலவரத்தில் தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் மூன்று காவலர்களுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்க மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மூன்று நபர்களும் மைத்தேயி குடும்பத்தை சேர்த்தவர்கள் என்று கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த மைத்தேயி சமூக மக்கள் குகி சமூகத்தை சேர்ந்த நபர்களின் வீடுகளை தீயிட்டனர் .
அந்த பகுதிகளில் காலை 5 மணி முதல் மாலை 6 மணிவரை தளர்த்தப்பட்ட ஊரடங்கு இந்த கலவரத்தால் மீண்டும் ஊரடங்கு அமல் படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த ஊரடங்கானது காலை 5 மணி முதல் 10.30 மணி வரை மட்டும் தளர்த்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.