வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கின்றதா… அப்போ இத ஒரு டம்ளர்ல மட்டும் வச்சு பாருங்க… கொசுக்கள் இருக்காது…
நம் வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை விரட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கொசுக்கள் மூலமாக நிறைய பாதிப்புகள் நமக்கு ஏற்படும். நிறைய வியாதிகள் நமக்கு ஏற்படும். டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களும் கொசுக்கடி மூலமாக ஏற்படுகின்றது. இந்த கொசுத் தொல்லையை நீக்க நாம் பொதுவாக கொசுவத்தி சுருள், குட்நைட் லிக்விட் ஆகியவை பயன்படுத்துவோம்.
ஆனால் இவை அனைத்தும் நாட்கள் செல்ல செல்ல பல பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக கொசுவத்தி சுருள் சிலருக்கு சேராது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்படும். மேலும் கொசு கடிக்காமல் இருப்பதற்கு நாம் சில கிரீம் வகைகளை பயன்படுத்துவோம். ஆனால் அதுவும் சிலருக்கு சரும பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்த பாதிப்புகள் எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது எவ்வாறு என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கொசுக்களை விரட்டும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது புட் வினிகர்
* டூத் பேஸ்ட்
* ஷேம்பு
* எலுமிச்சம் பழம்
* சூடம்
செய்முறை…
இதற்கு ஒரு டம்ளரில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இரண்டு டேபிள் ஸ்பூர் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எந்த வகையான டூத் பேஸ்டாக இருந்தாலும் சரி. இந்த டம்ளரில் சிறிதளவு டூத் பேஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் ஒரு எலுமிச்சம் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி தோலுடன் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தலைக்கு தேய்க்கும் ஷேம்பு சேர்த்து கொள்ளவும். பின்னர் இதில் மூன்று சூடங்களை பொடித்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இதை லேசாக கலந்து கொள்ள வேண்டும். இது போல மூன்று டம்ளர்களில் செய்து உங்கள் அறையில் ஒவ்வெரு பக்கம் வைத்து விடுங்கள். கொசுக்கள் அனைத்தும் வெளியே சென்று விடும்.