தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 309 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதுபற்றித் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் தமிழகத்தில் ஏழு பேர் கொரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளத்கவும் 1580 பேர் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழகத்தில் 411பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.
மேலும் 484 பேரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.