சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!
இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.
பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.
ஓலா, ஊபேர், ஸ்விக்கி, ஜூமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.
பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய ஆட்டோ வாங்க 71 லட்சம் மானியம் வழங்கும் திட்டம்
மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் 725 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மகரி இலவச பயணத்திட்டம் பலராறும் விமர்சிக்கப்பட்டது இந்நிலையில் திட்டத்தை விடியில் பயணத்திட்ட என்று புதிய பெயர் சுற்றியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகளிர்க்கு விடப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தமிழக பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு குறிப்பாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அத்தனை திட்டங்களையும் விரைவில் சிறப்புடன் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு ஏதும் சிறப்பு திட்டங்களை அறிவித்தால் நன்றாக இருக்கும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்