தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

0
134

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 199 உலக நாடுகளுக்கு பரவி இதுவரை 53 ஆயிரத்திற்கும் மேலான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 411 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 102 பேருக்கு கொரோனோ அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்த விரிவான தகவலையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபர்கள் 2,10,538 என்றும் தனிமை வார்ட்டில் உள்ளவர்கள் 23,689 என்றும் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியில் கூறியதாவது;

தமிழகத்தில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை. முன்பு இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 411 ஆக கூடியுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த யாரும் அதி தீவிர சிகிச்சை அளிக்கும் நிலையில் இல்லை. கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் கூறினார். மீதமுள்ள இருவரில் ஒருவர் அமெரிக்கா சென்று திரும்பியவர் என்றும் மற்றொருவர் குறித்த தகவல் விசாரித்து வருவதாகவும் கூறினார்.

Previous articleஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!
Next articleரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு