சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு! கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

0
184

சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு! கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த மக்களின் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் இன்று தேசிய துக்க தினத்தை அந்நாட்டு அரசு கடைபிடிக்கிறது.

கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு வெளிநாட்டு பயணிகள் மூலம் வேகமாக பரவி பல்வேறு நாடுகளில் கடையை விரித்துள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் பெரும் ஆபத்தை கொரோனா உண்டாக்கியுள்ளது. இதுவரை உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இதனால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. தினமும் பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.

சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்திருப்பதால் பொது மக்கள் வெளியில் நடமாடும் வகையில் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு இயங்கும் தனியார் தொழிற்சாலைகள் நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரளவு மக்களின் அன்றாட வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதிமாக ஏப்ரல் 4 ல் (இன்று) தேசிய துக்க தினம் சீனாவில் கடைபிடிக்கப்படுகிறது.

Previous articleஉலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று 11லட்சத்தை நெருங்குகிறது : சர்வதேச மற்றும் மாநில விபரங்கள்!
Next articleமதரீதியான கூட்டங்களை நடத்த அதிரடியாக தடைவிதித்த முதல்வர் : உச்சகட்ட பரபரப்பு!