வாகனத்தை நிறுத்தியதால் பெண் போலீஸை பழிவாங்கிய ஸ்டேட் பாங்க் மேலாளர்!

0
90

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து காரணமின்றி பொது இடங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் அத்தியாவசிய வேலைகளுக்காக செல்பவர்கள் ஆட்டோவை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது தேவையேற்பட்டால் சொந்த வாகனத்தில் செல்ல உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில் திருவொற்றியூரை சேர்ந்த ஸ்டேட் பாங்கின் துணை மேலாளர் இன்று காலையில் வேலைக்கு செல்ல ஆட்டோவை பயன்படுத்தியுள்ளார். அங்கே இரு அங்கு வாகன தணிக்கை செய்து வந்த காவல்துறையினர் ஆட்டோவில் செல்ல அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் பெண் காவலர் ஒருவர் திருவெற்றியூரில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்கும் முன்ப வங்கியின்ு துணை மேலாளரிடம் கையெழுத்து வாங்க சென்றுள்ளார், அப்போது ‘காவல்துறை எங்களுக்கு இடையூறு தான் செய்கிறது நாங்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்யும் வேண்டும்’ என்று கூறி கையெழுத்து போட மறுத்துள்ளார்.

இதனால் வேதனையுற்ற பெண் காவலர் வங்கி துணை மேலாளர் இந்த காரணத்திற்காக தான் கையெழுத்து போட மறுத்தார் என்ற குரல் பதிவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் குரல் பதிவு வைரல் ஆனதால் அனைவரும் அந்த துணை மேலாளரை வசை பாடி வருகின்றனர்.

author avatar
Parthipan K