யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் மற்றொரு பாடல் வெளியானது!!

0
136

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் மற்றொரு பாடல் வெளியானது!!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.இவர் ரஜினி,விஜய்,அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் கதாநாயகனாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘பொம்மை நாயகி’.இப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்பொழுது ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் அவர்களின் இயக்கத்தில் ‘லக்கிமேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படத்தில் யோகி பாபுவை தவிர்த்து வீரா,ரேச்சல் ரெபேக்கா,அப்துல் லீ,ஆர்.எஸ். சிவாஜி,அமித் பார்கவ்,சாத்விக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உண்மையான அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து லக்கி மேன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியது.சமீபத்தில் இப்படத்தின் ‘நாமதான் ராஜா’ என்ற முதல் பாடல் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில் தற்பொழுது ‘ஒரு வரி கதை’ என்று தொடங்கும் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.பிரதீப் குமார் குரலில் உருவாகியுள்ள இப்பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘லக்கி மேன்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!
Next articleபும்ரா தலைமையில் இந்திய அணி… அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்!!