காசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!
அபுதாபியில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு லாட்டரி சீட்டில் பலகோடி ரூபாய் பரிசு விழுந்து கோடீஸ்வரர் ஆன சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேஷ் கொரோத்தன் என்பவர் குடும்பத்துடன் அபுதாபியில் உள்ள அல்கைமா என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ஜிஜேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து ஐக்கிய அரசு எமிரேட்ஸ்ஸின் மூலம் நடத்தப்படும் மாதாந்திர அபுதாபி பிக் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகி உள்ளது. கொரோனோ பாதிப்பின் காரணமாக நேரடியான அறிவிப்புகள் வெளியிடாமல் லாட்டரி குலுக்கல் முடிவினை இணையத்தில் வெளியிட்டனர். இதனை ஜிஜேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் கவனித்துள்ளார்.
இந்நிலையில் ஜிஜேஷ் கொரோத்தன் வாங்கியிருந்த “041779′ என்ற லாட்டரிக்கு 20 மில்லியன் திர்ஹாம் முதல் பரிசாக விழுந்திருந்தது. இந்திய மதிப்பில் சுமார் 41 கோடி ரூபாய் லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. இதைப் பார்த்ததும் ஜிஜேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு பெரும் மகிழ்ச்சியில் இன்பத்தின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பேசிய ஜிஜேஷ் கொரோத்தன்: இந்த லாட்டரி பரிசை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும், தனது மகளின் படிப்பு செலவுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சொகுசு கார்களை வாங்கி வெளியில் வாடகைக்கு விடப்போவதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மீண்டும் கேரளாவுக்கே சென்றுவிடலாம் என்று நினைத்திருந்த வேளையில் லாட்டரி ஜாக்பாட் அடித்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியதோடு, பணம் வந்தாலும் நட்பை மறக்காத ஜிஜேஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.