திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.? இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

0
166

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.?
இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று இந்தியா முழுவதும் பரவலாக வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீட்டில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் டார்ச் உள்ளிட்டவை எரியவிட்டனர். சில இடங்களில் தீப்பந்தங்களை ஏந்திய மக்கள ஊர்வலமாக சென்றதோடு பட்டாசுகளும் வெடித்து கொண்டாடப்பட்டன.

பிரபல தனியார் நிறுவன இயக்குனர் ரத்தன் டாடா உட்பட பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் விளக்கேற்றினர். மேலும் சினிமா திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உட்பட பலர் பிரதமர் மோடியின் பேச்சினை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு தங்களது வீடுகளில் விளக்குகளை எரியவிட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு மெழுகுவர்த்தியை ஏந்தி வீட்டுக்கு வெளியே வந்து நின்றார். அப்போது மெழுகுவர்த்தியை தலைக்கு மேல் மெழுகுவர்த்தியை தூக்கி காண்பித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காலில் அணிந்திருந்த செருப்பின் நிறம் மேல்பகுதி கருப்பு நிறமாகவும், கீழே சிகப்பு நிறமாகவும் இருந்தது. அரசியல் குறியீடாக ரஜினி அணிந்திருந்தாரோ? என்று கேள்வி எழுப்பும் வகையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கருப்பு மற்றும் சிகப்பு நிறம் தமிழகத்தின் எதிர்கட்சியான திமுகவின் கொடியாகும். ரஜினி அணிந்திருந்த செருப்பின் நிறமும் திமுக கட்சி கொடியின் நிறமும் ஒரேமாதிரி இருப்பதால் இணையத்தில் இதுகுறித்த புதிய அரசியல் விவாதம் தொடர்ந்து வருகிறது.

Previous articleகாசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!
Next articleகொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்