கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!

0
40

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!

 

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் உடனான  முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

அதாவது தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த கோபிநாத், முன்னாள் கருணாநிதி அவருடனான சந்திப்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். கோபிநாத் அவர்கள் தான், கலைஞர் அவர்களை நேர்காணல் எடுக்க சென்ற போது அங்கு நடந்த சிலவற்றை விவரித்துள்ளார்.

 

ஒருமுறை கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கும் டி.வி நேர்காணல் நிகழ்ச்சிக்கு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேரம் ஒதுக்கினார். அதிகாலை 5 மணி மணி அளவில் கலைஞர் அவர்களின் நடை பயிற்சி செய்யும் நேரத்தை நேர்காணலுக்காக ஒதுக்கினார். விஜய் டி.வி-யின் நிகழ்ச்சி தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் நேர்காணலின் போது கேட்கும் கேள்விகளுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டே கலைஞர் கருணாநிதி அவர்கள்  பதில் அளித்து வந்தார். இது தொடர்பான புகைப்படங்களும், காணொளி காட்சியும் சமூக வலைத்தளங்களில் நிறைய பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நேர்காணலின் போது, கலைஞர் அவர்கள் சாதாரண பணியின் மற்றும் லுங்கி இதைதான் அணிந்திருந்தார். மேலும், வழக்கமாக வரும் பாதுகாவலர்கள் மட்டும்தான் உடன் வந்தனர். ஆனால் கோபிநாத் அவர்கள் கோட்- சூட் அணிந்து பெரும் பணக்காரர் போல, பிரபலம் போல தோற்றமளித்தார். இதைக் கண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள் நகைச்சுவையாக யார்? யாரை பேட்டி எடுக்கிறார்? நான் உன்னை பேட்டி எடுக்கிறேனா? என்று நகைச்சுவையாக கேள்வி கேட்டார். இந்த இனிய சம்பவத்தை ஒரு தனியார் யூடிப் சேனலின் நேர்காணல் ஒன்றில் கோபிநாத் அவர்கள் பகிர்ந்து உள்ளார்.