அதிமுக வீர எழுச்சி மாநாடு… சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்!!

0
27

அதிமுக வீர எழுச்சி மாநாடு… சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்…

 

நாளை(ஆகஸ்ட்20) அதிமுக கட்சியின் வீர எழுச்சி மாநாடு மதுரையித் நடைபெறவுள்ள நிலையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து அதிமுக தொண்டர்கள் மதுரை புறப்பட்டு சென்றுள்ளனர்.

 

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தவியேற்ற பிறகு நடுக்கும் முதல் மாபெரும் பொதுக்கூட்டம் இந்த எழுச்சி மாநாடு ஆகும்.  இந்த வீர எழுச்சி மாநாட்டில் எடப்பாடி கே பழனி சாமி உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்தா கொள்ள இருக்கிளார்கள்.

 

அதிமுக நடத்தும் இந்த வீர எழுச்சி மாநாட்டுக்கு கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் என்று 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எழுச்சி மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

 

அது மட்டுமில்லாமல் நாளை(ஆகஸ்ட்10)  நடைபெறவுள்ள மாநாட்டுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ஒரு சிறப்பு இரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்18) இரவு 11.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் மூலம் 1100 அதிமுக தொண்டர்கள் மதுரைக்கு புறப்பட்டனர்.

 

அதிமுக எழுச்சி மாநாட்டுக்கு செல்லும் இந்த சிறப்பு இரயிலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் சத்யா, வடசென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ் ஆகியோர் இணைந்து அனுப்பி வைத்தனர்.

 

தொண்டர்கள் செல்லும் இந்த இரயில் குளிர்சாதனம் வசதியுடன் உள்ளது. இந்த இரயிலில் 1100 அதிமுக தொண்டர்கள் 13 பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். அதிமுக தொண்டர்கள் சென்ற இந்த சிறப்பு இரயில் இன்று(ஆகஸ்ட்19) காலை 4 மணியளவில் மதுரை சென்றது.

 

 

இந்த சிறப்பு ரயிலின் ஜன்னல்கள் முழுவதிலும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு அழைக்கின்றோம் என்ற வசனங்களுடன் புகைப்படங்கள் ஒட்டியிருந்தது.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு செக்யூரிட்டி நியமிக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் பாதுகாப்பான முறையில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சிறப்பு இரயால் மூலமாக மட்டுமில்லாமல் பேருந்துகள், மற்ற இரயில்களின் மூலமாக அதிமுக தொண்டர்கள் வீர எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.