ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது! அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!

0
180

ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது! அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!

தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது என்று அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடியாக கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது; கோவை மாவட்டத்திலுள்ள 15 அம்மா உணவகங்களின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் 37 ஆயிரம் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் பொருட்களை வாங்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • கோவை மாவட்டத்தில் 8 லட்சத்து
    79 ஆயிரத்து 678 ரேசன் அட்டைகளுக்கு தர வேண்டிய ரூபாய்க்கான டோக்கன் வழங்கி உள்ளோம்.
  • கோவையில் 43 ஆயிரத்து 630 கட்டுமான அமைப்புசாரா பணியாளர்களுக்கு நிவாரணம் வழக்கப்பட்டு வருகிறது.
  • இதுவரை கோவையில் 234 நபர்களுக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
  • வீட்டு கண்காணிப்பில் இருந்து 2 ஆயிரத்து 248 பேர் தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் கடைகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
  • கோவையில் 387 செயற்கை சுவாசக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
  • தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் ஊழியர்களின் மாத சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. இவ்வாறு அமைச்சர்
    எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Previous articleஅதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை
Next articleஜெர்மனிக்கு சொந்தமான மருத்துவ உபகரணங்களை அபேஸ் செய்த அமேரிக்கா : வெளியான அதிர்ச்சி பின்னணி!