அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!

0
148

 

அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!

 

நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுக மாநாடு

 

நேற்று மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் ‘அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

 

இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஏ, பி, சி என 3 கவுண்டர்களில் உணவுகள் தயார் செய்யப்பட்டது.

 

மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் சாம்பார் சாதம் மட்டும் விரும்பி சாப்பிட்டுள்ளனர். யாரும் புளியோதரை விரும்பி சாப்பிடவில்லை.

 

டன் கணக்கில் வீணடிக்கப்பட்ட உணவு

 

மாநாடு முடிந்து மறுநாள் பாத்திரங்களை எடுக்க வந்த ஊழியர்கள் டன் கணக்கில் புளியோதரை வீணடிக்கப்பட்டதை கண்டு ஷாக்கானார்கள்.

 

மதுரை விமான நிலையத்திற்கு அருகிலேயே டன் கணக்கில் புளியோதரை சாதம் கொட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்றும், உணவு கழிவுகளை அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தற்போது சமூகவலைத்தளங்களில் மாநாட்டில் டன் கணக்கில் வீணடிக்கப்பட்ட உணவின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், நான் ஒரு விவசாயி என்று மார்பை தட்டிக்கொள்ளும் எடப்பாடி நேற்று டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்டிருப்பது சரிதானா என்றும், விழா ஏற்பாட்டாளர்கள் அந்த உணவை ஏழை, எளிய, ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று கண்டனங்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

 

Previous articleவாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!
Next articleபாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!