ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

0
141

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

உலக நாடுகளில் உயிர் சேதங்களை அதிகம் ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதுவரை 14 நாட்கள் ஊரடங்கு முடிந்தும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. மேலும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, தெலுங்கானா கர்நாடகா போன்ற மாநிலத்தில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பேர் பாதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு 166 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு வருகின்ற ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 17 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் மூடியே இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவரை ஒரிசாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

நாட்டிலேயே முதல்முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமஹாராஜா ஜெய் சிங்கிடம் அசிங்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் : வரலாறை பின்னோக்கி பார்ப்போம்!
Next articleகொரோனா பாதித்த இந்திய மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தொடரும் கோர சம்பவங்கள்!