உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!!

0
174
How to make "Murangai Spinach Soup" to lose weight and promote health!!
How to make "Murangai Spinach Soup" to lose weight and promote health!!

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!!

நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து,உடல் பருமனை குறைக்கின்றது.இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம்.

முருங்கை கீரையில் சூப் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:-

முருங்கை கீரை – 2 கைப்பிடி அளவு

கொத்தமல்லி – 1 தேக்கரண்டி

பூண்டு – 6 பற்கள்

சி.வெங்காயம் – 6 பற்கள்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

உப்பு

செய்முறை:-

முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் உப்பை தவிர்த்து மற்ற அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அனைத்து விட்டு அவற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும்.இந்நிலையில் வடி கட்டியில் படிந்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் அடித்து பிறகு மீண்டும் அந்த பானத்தில் கலக்கி தேவைக்கேற்ப உப்பு சேர்த்தால் சுவையான முருங்கை கீரை சூப் தயார்.இவற்றை தினமும் பருகி வந்தோம் என்றால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.