இனி இதிலும் வீடியோ, ஆடியோ வசதி!!! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!!
வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இருப்பது போலவே எக்ஸ் தளத்திலும் வீடியோ அழைப்பு ஆடியோ அழைப்பு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார்.
உலகில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்கள் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். டுவிட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு வகையான அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க் அவர்கள் முதன் முதலாக புளூ டிக் வசதிக்கு கட்டணம் செலுத்தும் வசதியை கொண்டு வந்தார்.
இதன் முலமாக அனைத்து பயனர்களும் அதாவது புளூடிக் சந்தாதாரர்களுக்கு மட்டும் வருமானம் ஈட்டும் வாய்ப்பை எலான் மஸ்க் அவர்கள் வழங்கியுள்ளார். அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளாக எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தின் பெயரையும் லோகோவையும் மாற்றினார்.
டுவிட்டருக்கு எக்ஸ் என்ற லோகோவை மாற்றி எக்ஸ் என்ற.பெயரையும் வைத்தார். மேலும் எக்ஸ் செயலி இனிமேல் சூப்பர் செயலியாக செயல்படப் போகின்றது என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி தற்பொழுது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டாள்ளார். அந்த அறிவிப்பு எதை பற்றி என்றால் எக்ஸ் தளத்தில் விரைவில் வீடியோ ஆடியோ அழைப்பு வசதி கொண்டு வருவது பற்றிதான்.
இது தொடர்பாக எலான் மஸ்க் அவர்கள் “எக்ஸ் தளத்தில் விரைவில் வீடியோ கால், ஆடியோ கால் செய்யும் வசதியை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ், மேக், பிசி என்று அனைத்து ஓ.எஸ் தளத்திலும் இந்த வசதி இயங்கும். இதற்கு தனியாக தொலைபேசி எண்கள் தேவையில்லை. இது தனித்துவமாக இயங்கும்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வசதியும் புளூ டிக் வசதி போலத்தான். சந்தா தொகை செலுத்தினால் மட்டுமே இந்த வீடியோ ஆடியோ அழைப்பு வசதியை பயன்படுத்த முடியும் என்று குறப்படுகின்றது. எலான் மஸ்க் செய்யும் இந்த புதிய வசதிகளை பார்த்தால் எக்ஸ் தளத்தில் பதவு போடுவதற்கும் உள் நுழைவதற்குமே சந்தா செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.