இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்தா? வெளியான தகவல் : ஷாக்கான ரசிகர்கள்!!

0
95

இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்தா? வெளியான தகவல் : ஷாக்கான ரசிகர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது.

இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதற்காக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளன. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, பும்ரா மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மீண்டும் ஒன்றாக இணைந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் பாலக்கலேவில் மைதானம் 91 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், போட்டி நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இந்தப் போட்டி ரத்தானால் அது மீண்டும் நடத்தப்படாது. இந்நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்பட்டால், பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா ஒரு புள்ளியுடன் இரண்டவது இருக்கும். இதன் பிறகு, வரும் திங்கட்கிழமை இந்தியா நேபாளம் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும்.

அந்தப் போட்டியும் மழையால் நின்றுபோனால், மீண்டும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படி நடந்தால் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு சென்று விடும்.

Previous articleஎன்னது.. எனக்கும் பும்ராவுக்கும் மனகசப்பா…? மனம் திறந்து பேசிய முகமது ஷமி!
Next articleதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!