எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!!

0
251

எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!!

பிரபல நடிகை ஒருவர் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்றும், ஆனால் ஒரு குழந்தை இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகீரென்று பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விமல் அவர்களின் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான களவானி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் களவானி திரைப்படத்தை தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமேன், மூடர் கூடம், கலகலப்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகை ஓவியா அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு சமீபத்திய பேட்டியில் நடிகை ஓவியா முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த வதந்தி குறித்து பேசிய நடிகை ஓவியா அவர்கள் “ஆம் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. அது உண்மைதான். ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதுவும் உண்மைதான். ஆம் என்னுடைய நாய் குட்டிதான் என்னுடைய குழந்தை. என்னுடைய நாய்க் குட்டியை நான் குழந்தை போலத்தான் பார்த்துக் கொள்வேன் என்று அவர்கள் கூறியுள்ளார்.

Previous articleலியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!!
Next articleஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!